யாழ்ப்பாணம் – வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி
அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலை கட்டுமானங்களை இடை நிறுத்துவதற்கு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்
கூட்டம் நேற்று (26) நடைபெற்றது.
இதன்போது விடுவிக்கப்படாத மக்களின் காணிகளுக்குள் அனுமதியின்றி சட்டவிரோதமான
கட்டுமானங்கள் அமைக்கப்படுவதாகவும் குறிப்பாக இராணுவத்தால் வைத்தியசாலை
அமைப்பது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது.
சிறீதரன் முன்மொழிந்த தீர்மானம்
குறித்த விடயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்மொழிந்த தீர்மானத்தை வலிகாமம்
கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் வழிமொழிந்த நிலையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை குறித்த இராணுவ வைத்தியசாலை தொடர்பில் ஜனாதிபதியினுடைய கவனத்திற்கும் பாதுகாப்புச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் அதை நிறுத்துவதா? அதைக் கட்டி மக்களிடம் எதிர்காலத்தில் கையளிப்பது என்பது தொடர்பாக பேச வேண்டும். குறித்த நில உரிமையாளர்களுடம் நாம் பேச வேண்டும்” என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

