Last Updated:
19வது ஐபிஎல் இன்று தொடக்கம். பெங்களூரு vs ஐதராபாத் முதல் ஆட்டம். நெரிசலில் உயிரிழந்த 11 பேரை நினைவுகூர பிசிசிஐ தொடக்க விழா ரத்து. நுவான் துஷாரா விலகல் அதிர்ச்சி.
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கும் நிலையில், முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இன்று தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் மொத்தமுள்ள 10 அணிகளும் தலா 14 போட்டிகளில் விளையாடுகின்றன. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 13 மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை பெங்களூரு அணி கைப்பற்றியதை கொண்டாடும் விதமாக நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களை நினைவுகூறும் விதமாக நடப்பாண்டு தொடக்க விழாவை பிசிசிஐ ரத்து செய்தது.
இதற்கு முன் 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் காரணமாக ஐபிஎல் தொடக்க விழா ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 2வது முறையாக ரத்தாகியுள்ள்து. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியும், ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் இலங்கை கிரிக்கெட் வாரியம் நுவான் துஷாரவுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.


