• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிசிடிவி கமராவில் போதைப்பொருள் கடத்திய நபருக்கு தடுப்புக்காவல்

GenevaTimes by GenevaTimes
March 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிசிடிவி கமராவில் போதைப்பொருள் கடத்திய நபருக்கு தடுப்புக்காவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சிசிடிவி கமராவில் மறைத்து போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆந் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவினை அக்கரைப்பற்று நீதிமன்று வழங்கியுள்ளது.


கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குத் தனியார் பேருந்து மூலம் கடத்தி வரப்பட்ட 34 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 20 வயதுடைய சந்தேக நபர்   வியாழக்கிழமை (26) அதிகாலை அக்கரைப்பற்றில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.


குறித்த சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (26)  ஆஜர்படுத்திய போது எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆந் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


கைதான சந்தேக நபர் சிசிரிவி கமரா பொதிக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த   போதைப்பொருள் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த நிலையில் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைதானார்.


கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில்  இனந்தெரியாத நபரொருவரால் பொதியொன்று கையளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொதியில் தொலைபேசி இலக்கமொன்று குறிப்பிடப்பட்டிருந்ததுடன்இ அக்கரைப்பற்றில் உள்ள நபரொருவர் இதனைப் பெற்றுக்கொள்வார் எனப் பேருந்து நடத்துனரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இக்கடத்தல் குறித்துக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து  அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் பகீரதன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த இடத்திற்கு பொதியை பெற்றுக்கொள்ள வருகை தந்த சந்தேக நபர் கைதானார்.


 கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து  மீட்கப்பட்ட சிசிரிவி கமராவினை சோதனையிட்டபோது  அதன் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 34 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R



Read More

Previous Post

போர்ட் கிள்ளானில் அதிவேகமாகச் சென்ற டிரெய்லரிலிருந்து கொள்கலன் கீழே விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் | Makkal Osai

Next Post

தூதரக முயற்சிகளை அதிகரிக்க அன்வார் மற்றும் பிரபோவோ முடிவு – Malaysiakini

Next Post

தூதரக முயற்சிகளை அதிகரிக்க அன்வார் மற்றும் பிரபோவோ முடிவு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin