ரஷ்யாவின் தாகெஸ்தான் குடியரசிலிருந்து சுமார் 150 டன் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுதி ஈரானைச் சென்றடைந்துள்ளது.
குறித்த விடயத்தை ஆளுநர் செர்ஜி மெலிகோவ் (Sergey Melikov) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்த உதவிப் பொருட்கள் ஈரானிய செம்பிறை சங்கத்திடம் (Red Crescent Society) ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சூழ்நிலைகள்
இதையடுத்து, அவர்கள் இதனை ஏழைகள் மற்றும் தேவையுள்ளவர்களுக்கு விநியோகிப்பார்கள் என மெலிகோவ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உதவி நடவடிக்கையானது தாகெஸ்தான் போக்குவரத்து அமைச்சகம், தாகெஸ்தான் தலைநகர் மகாச்கலாவில் (Makhachkala) உள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சக அலுவலகம் மற்றும் பியூர் ஹார்ட் (Pure Heart) அறக்கட்டளை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 300 டன்களுக்கும் அதிகமான மருந்துகள் அஜர்பைஜானின் அஸ்தாரா (Astara) எல்லைக் கடப்பு வழியாகக் கொண்டு செல்லப்பட்டு ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக ரஷ்ய அவசரகாலச் சூழ்நிலைகள் அமைச்சகம் RTVI ஊடகத்திடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

