அதேபோல், எரிபொருள் இருப்பு, விநியோகம் உள்ளிட்டவை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். அப்போது, போர் சூழல் பாதிப்புகளின் தாக்கம் மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தியாவிலும் லாக்டவுன் விதிக்கப்படலாம் என்கிற தகவல் வேகமாக பரவி வரும் நிலையில், அப்படியான எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும், மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


