Last Updated:
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
மேற்காசிய போர் சூழல் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக இந்தியாவில் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில், எரிபொருள் இருப்பு, விநியோகம் உள்ளிட்டவை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
அப்போது, போர் சூழல் பாதிப்புகளின் தாக்கம் மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ’டீம் இந்தியா’ என்ற அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்வதே இக்கூட்டத்தின் முக்கிய இலக்காகும்.
அதேநேரம், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 5 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்காகத் தனியொரு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிகள் கூட்டமும், பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


