அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல், மணிஷாபென் படேல் உள்ளிட்ட 4 பேர், அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலம் கிரீன்வில்லி கவுன்ட்டி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த கார் திடீரென சாலையை விட்டு விலகிச் சென்று அதிவேகத்தில் மரத்தின் மீது மோதியது. இதில் ரேகாபென், சங்கீதாபென், மணிஷாபென் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
இதையும் படிக்க:
எலான் மஸ்க் திடீர் சீனா விசிட்… காரணம் என்ன?
விபத்து குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில் , “கார் ஐ-85 நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. திடீரென சாலையை கடந்து சாலையின் மீது ஏறி பிளாட்ஃபார்ம் அருகில் இருந்த மரத்தின் மீது மோதியது. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை தாண்டி சென்றதே விபத்திற்கான காரணம். இந்த விபத்தில் வேறு எந்த வாகனங்களுக்கும் தொடர்பில்லை” எனக் கூறினார்.
விபத்து குறித்த தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை ரோந்து் குழுவினர் மற்றும்தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில்காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
