தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநில தேர்தலையொட்டி, ஐபிஎல் போட்டிகளின் முழுமையான அட்டவணையை ஒரே கட்டமாக பிசிசிஐ வெளியிடவில்லை. முதல் கட்டமாக முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டுமே வெளியிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் ஐபிஎல் தொடர் நாளை மறுதினம் சனிக்கிழமை ஆரம்பம் ஆகிறது. பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் கூடிய பிசிசிஐ நிர்வாகிகள் மீதமுள்ள லீக் போட்டிகளுக்கான அட்டவணையை இறுதி செய்திருந்தனர். அதன் அடிப்படையில் புதிதாக 50 லீக் போட்டிகள் என மொத்தம் 70 போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மே 24 ஆம் தேதி வரை மொத்தம் 70 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது.
மார்ச் 30 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – கவுகாத்தி – மாலை 7:30
ஏப்ரல் 3 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – சென்னை – மாலை 7:30 PM
ஏப்ரல் 5 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு – மாலை 7:30
ஏப்ரல் 11 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் – சென்னை – மாலை 7:30
ஏப்ரல் 14 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை – மாலை 7:30
ஏப்ரல் 18 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – ஹைதராபாத் – இரவு 7:30 மணி
ஏப்ரல் 23 – மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை – மாலை 7:30
ஏப்ரல் 26 – குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – அகமதாபாத் – பிற்பகல் 3:30
மே 5 – டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் மோதல் – டெல்லி – மாலை 7:30
மே 10 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதல் – சென்னை – பிற்பகல் 3:30 மணி
மே 15 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் மோதல் – லக்னோ – மாலை 7:30
மே 18 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதல் – சென்னை – மாலை 7:30
மே 21 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் மோதல் – சென்னை – மாலை 7:30

