Last Updated:
மே 24 ஆம் தேதி வரை மொத்தம் 70 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2 ஆம் கட்ட போட்டி அட்டவணையை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 50 லீக் போட்டிகளுக்கான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநில தேர்தலையொட்டி, ஐபிஎல் போட்டிகளின் முழுமையான அட்டவணையை ஒரே கட்டமாக பிசிசிஐ வெளியிடவில்லை. முதல் கட்டமாக முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டுமே வெளியிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் ஐபிஎல் தொடர் நாளை மறுதினம் சனிக்கிழமை ஆரம்பம் ஆகிறது. பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் கூடிய பிசிசிஐ நிர்வாகிகள் மீதமுள்ள லீக் போட்டிகளுக்கான அட்டவணையை இறுதி செய்திருந்தனர்.
அதன் அடிப்படையில் புதிதாக 50 லீக் போட்டிகள் என மொத்தம் 70 போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மே 24 ஆம் தேதி வரை மொத்தம் 70 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது.
சென்னை (சேப்பாக்கம்), மும்பை (வான்கடே), பெங்களூரு (சின்னசாமி), கொல்கத்தா (ஈடன் கார்டன்ஸ்), டெல்லி (அருண் ஜெட்லி), அகமதாபாத் (நரேந்திர மோடி மைதானம்), ஹைதராபாத், லக்னோ, ஜெய்ப்பூர் தர்மசாலா, ராய்ப்பூர், நியூ சண்டிகர் (முல்லன்பூர்) என மொத்தம் 12 மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.


இந்த சீசனில் மொத்தம் 84 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் ‘டபுள் ரவுண்ட்-ராபின்’ முறையில் தலா 14 போட்டிகளில் விளையாடும்.




