வடக்கு மாகாணத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைபடுத்துவதில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இலங்கை ஆசிரியர் சங்கம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டமானது இன்றையதினம் வடக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மாகாண கல்வித்திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க
தீர்மானித்துள்ளதாக தெரிவித்து நிலையில் ஆசிரியர்கள் பலர் கூடியிருந்து சில பதாதைகளைத் தாங்கியவாறு கோசம்
எழுப்பியுள்ளனர்.
கல்வி திணைக்களத்திற்கு மேல் முறையீடு
அத்துடன் ஏற்கனவே கஷ்டப் பிரதேசங்களில் பணிபுரிந்தோர் நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் குடும்ப சூழல் காரணமாக தூர இடங்களுக்கு செல்ல முடியாதவர்கள் என பல ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் மாகாண கல்வி திணைக்களத்திற்கு மேல் முறையீடு செய்தும் அந்த முறையிட்டினை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு மாகாண கல்வி திணைக்களம் வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த சிலர் வடமாகண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வார்பிள்ளை ஸ்ரீ என்பவரை சந்தித்துள்ளனர்.
தமது போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும்
இதன் போது கருத்து தெரிவித்த அவர்,
“மாகாண கல்வி திணைக்களம் ஊடாக எனக்கு எந்த ஒரு மேல்முறையீடும் அனுப்பப்படவில்லை என்றும் மேல்முறையீடு அனுப்பப்பட்டால் மட்டுமே தம்மால் பரிசீலனை செய்ய முடியும் எனவும் இதற்கு என்னால் பதில் கூறமுடியாது” என
தெரிவித்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், மேல்முறையீடு பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு வழங்கும் வரை நாங்கள் தற்போது பணியாற்றும் பாடசாலையிலே பணியாற்ற அனுமதி வழங்குமாறு அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் தமது போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

