Last Updated:
சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் தற்போது நடைமுறையில் உள்ள அதே விதிகளே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு விதிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் தற்போது நடைமுறையில் உள்ள அதே விதிகளே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே குறைந்தபட்சம் 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் கிராமப்புறங்களில் இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே குறைந்தபட்சம் 45 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தில் முன்கூட்டியே சிலிண்டர்களைப் பதிவு செய்ய வேண்டாம் என்றும், தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு எல்பிஜி இருப்பு உள்ளது என்றும் மத்திய அரசு விவரித்துள்ளது. நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவும் செய்திகளும் அடிப்படையற்றவை என்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் விளக்கம் அளித்துள்ளது.
நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் விநியோகச் சங்கிலி எவ்விதத் தடையுமின்றி இயல்பாக இயங்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்பி எரிபொருள் நிலையங்களில் கூட்டமாக குவிய வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும் கேட்டுக்கொள்ளப்படுள்ளனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றமில்லை: வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசு அறிவுறுத்தல்!


