Last Updated:
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி, NRC மூலம் குடியுரிமை பறிப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது மக்களின் வாக்குரிமையைக் குறிவைப்பவர்கள், அடுத்ததாக தேசிய குடிமக்கள் பதிவேடு மூலம் குடியுரிமையைப் பறிக்க முயற்சிப்பார்கள் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜக-வின் கோட்டையாகக் கருதப்படும் ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று பரப்புரையைத் தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் வேட்புமனுக்கள் அசாமில் ரத்து செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். எனவே, திரிணமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது வழக்கறிஞர்களை அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினார். தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லை என்றும் விமர்சித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை தொடந்து தேசிய குடிமக்கள் பதிவேட்டை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம் மக்களின் குடியுரிமையைப் பறிக்க முயற்சிப்பார்கள் என்றும் எச்சரித்தார்.
இந்த தேர்தலுக்குப் பிறகும் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் நீடிக்கும் என்று கூறிய மம்தா பானர்ஜி, அதன் பிறகு, தான் டெல்லிக்குச் சென்று அங்குள்ள அரசைக் கவிழ்ப்பேன் என்றும் சூளுரைத்தார்.
தேசிய குடிமக்கள் பதிவேடு மூலம் குடியுரிமையைப் பறிக்க முயற்சிப்பார்கள்.. மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!


