Last Updated:
பல பகுதிகளில் வீடுகள் சிதிலமடைந்துள்ளதால் செய்வதறியாது திகைக்கும் மக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
அமெரிக்கா விதித்த கெடுவை பொருட்படுத்தாமல் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. ஏவுகணைகள் மூலமாக வீசப்பட்ட கொத்துக் குண்டுகள் பல பகுதிகளில் விழுந்தன.
ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் ஹெஸ்புல்லா அமைப்பினர் உள்ள லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. டைர் நகரத்தில் குடியிருப்புகளை நோக்கி ஏவுகணைகளை வீசியதில் வீடு, மசூதி மற்றும் மரம் ஒன்றும் சேதமடைந்தது. பல பகுதிகளில் வீடுகள் சிதிலமடைந்துள்ளதால் செய்வதறியாது திகைக்கும் மக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
ஈரான்
இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல மாடிக் கட்டிடம் ஒன்றில் இருந்து சிறுவனையும், அவனது தந்தையையும் வீரர்கள் மீட்டனர்.


