Last Updated:
சிறுத்தையை கூண்டுக்குள் வைத்து கண்காணித்து வரும் வனத்துறையினர், அது விரைவில் வனப்பகுதிக்குள் விடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை நீண்ட முயற்சிக்கு பிறகு போராடி மீட்கப்பட்டது. உமராலா தாலுகாவிற்கு உட்பட்ட பர்வாலா கிராமத்தில், விவசாய நிலப்பகுதியில் இரை தேடி சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்தது.
அப்போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தாலோ அல்லது கவனக்குறைவாலோ, திறந்தவெளி கிணறு ஒன்றுக்குள் அந்த சிறுத்தை தவறி விழுந்தது. கிணற்றுக்குள் இருந்து விசித்திரமான சத்தம் வருவதைக் கேட்ட அக்கம்பக்கத்து விவசாயிகள் அங்கு சென்று பார்த்தபோது, சிறுத்தை கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த வனத்துறையின் சிறப்பு மீட்புப் படையினர், நீண்ட முயற்சிக்கு பிறகு கயிறு கட்டி பாதுகாப்பாக சிறுத்தையை மீட்டனர். சிறுத்தையை கூண்டுக்குள் வைத்து கண்காணித்து வரும் வனத்துறையினர், அது விரைவில் வனப்பகுதிக்குள் விடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


