Last Updated:
Egg Price Drop| நாமக்கல்லில் முட்டை விலை 20 காசுகள் திடீர் சரிவு.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை திடீரென குறைந்துள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1300 கோழிப்பண்ணைகளில் 7.50 கோடி முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இவற்றின் மூலம் தினசரி சுமார் 6.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தியாகும் முட்டைகளுக்கான கொள்முதல் விலையை, நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) தினமும் நிர்ணயம் செய்து வருகிறது.
இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் அனுப்பப்படுவதுடன், மீதமுள்ளவை கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், நேற்று (மார்ச்.24) வரை ரூ.4.25 ஆக இருந்த முட்டை கொள்முதல் விலை, இன்று ஒரே நாளில் 20 காசுகள் குறைந்து ரூ.4.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.


