உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்துள்ளது.
அதன்படி, வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, ஒரு பீப்பாய் WTI கச்சா எண்ணெயின் விலை 4.42 சதவீதம் குறைந்து, 88.27 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
மேலும் ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 5.41 சதவீதம் குறைந்து, 98.84 டொலராக பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி
இதன்படி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு பீப்பாய் முர்பான் கச்சா எண்ணெயின்(Murban Crude) விலை 119.88 டொலர் ஆகும்.

அதன்படி, இது முந்தைய விலையை விட 11.31 சதவீதம் குறைவு என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

