• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மேற்காசியப் போர் எதிரொலி:  ஜனாதிபதி அநுரவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை! தட்டுப்பாடின்றி எரிசக்தி கிடைக்கப் புதிய திட்டம்? – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மேற்காசியப் போர் எதிரொலி:  ஜனாதிபதி அநுரவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை! தட்டுப்பாடின்றி எரிசக்தி கிடைக்கப் புதிய திட்டம்? – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
மேற்காசியப் போர் எதிரொலி:  ஜனாதிபதி அநுரவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை! தட்டுப்பாடின்றி எரிசக்தி கிடைக்கப் புதிய திட்டம்?

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.

மேற்காசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் திகதி முதல் நீடித்து வரும் மோதல்கள், உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஹார்மூஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியா மற்றும் இலங்கை போன்ற இறக்குமதியை நம்பியுள்ள நாடுகளுக்கு எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. 

இந்த இக்கட்டான சூழலில், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 24, 2026) தொலைபேசியில் ஆலோசித்தார். 

இந்த விவாதத்தின் போது, எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளைக் களைவது குறித்தும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.

இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவதற்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். இந்த உரையாடலின் போது, உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்மூஸ் ஜலசந்தியைத் திறந்து வைப்பதன் அவசியத்தை மோடி வலியுறுத்தினார். 

சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேற்காசியாவில் அமைதி திரும்புவதையே இந்தியா விரும்புவதாகவும், போர் பதற்றத்தைத் தணிக்கத் தேவையான ராஜதந்திர முயற்சிகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் டிரம்ப்பிடம் பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுடன் , மேற்கு ஆசியாவில் மேலெழுந்துள்ள சூழ்நிலை தொடர்பாகவும், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி துறை பாதுகாப்பிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் இடையூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இந்தியா-இலங்கை இடையில் எரிசக்தி ஒத்துழைப்பை…


— Narendra Modi (@narendramodi) March 24, 2026

இலங்கை ஜனாதிபதியுடனான ஆலோசனையின் போது, இந்தியா – இலங்கை இடையே ஏற்கனவே நடைமுறையில் உள்ள எரிசக்தி ஒத்துழைப்புத் திட்டங்களின் தற்போதைய நிலையை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். “அண்டை நாட்டுக்கு முன்னுரிமை” (Neighbourhood First) என்ற கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்குத் தேவையான கூடுதல் எரிபொருள் விநியோகம் மற்றும் மின்சாரக் கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. 

“நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய நாடுகள் என்ற ரீதியில், பொதுவான சவால்களை எதிர்கொள்ள நாம் இணைந்து செயல்படுவோம்” என பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தத் தூதரக ரீதியிலான நகர்வுகள், தென் ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் பொருளாதாரப் பதற்றத்தைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Read More

Previous Post

இந்தியாவில் முதல் முறையாக… கருணைக் கொலையால் காலமானார் ஹரீஷ் ராணா – 13 ஆண்டு கோமா நிலைக்கு முற்றுப்புள்ளி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஜூன் வரை வெப்ப அலை நீடிக்கும் என மெட் மலேசியா தகவல் – Malaysiakini

Next Post

ஜூன் வரை வெப்ப அலை நீடிக்கும் என மெட் மலேசியா தகவல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin