
பாபா வாங்காவின் கணிப்புப்படி மார்ச் 23 முதல் குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களுக்குப் பொற்காலம் தொடங்குகிறது; பணவரவு மற்றும் சொத்து சேர்க்கைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
உலகப்புகழ் பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் எப்போதும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகவே இருந்து வருகின்றன. அந்த வகையில், 2026 மார்ச் 23 முதல் 29 வரையிலான காலக்கட்டத்தில் கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் ஜோதிட ரீதியான மாற்றங்கள் குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களுக்குப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றன.
மேஷ ராசி
இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு அவர்கள் நீண்ட நாட்களாகக் கண்டு வந்த கனவுகள் நனவாகும் வாரமாக அமையப் போகிறது. குறிப்பாக, சொந்தமாக வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதற்கான சாதகமான சூழல் கைகூடி வரும். புதிய நபர்களின் அறிமுகம் உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு வித்திடும். வேலை தேடி அலைந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு இந்த வாரம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மிதுன ராசி
மிதுன ராசியைப் பொறுத்தவரை, கடந்த சில மாதங்களாக நிலுவையில் இருந்த அல்லது வராது என்று கைவிடப்பட்ட பணம் இந்த வாரம் உங்கள் கைக்கு வந்து சேரும். பழைய கடன் சிக்கல்கள் மற்றும் தேவையற்ற மன உளைச்சல்களில் இருந்து முழுமையான விடுதலை கிடைக்கும். ஆரோக்கிய ரீதியாகவும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைப்பதால், உங்கள் பணிகளில் வேகம் கூடும்.
அதேபோல், சிம்ம ராசிக்காரர்களுக்குச் சூழ்நிலைகள் அனைத்தும் உங்களுக்குச் சாதகமாகவே மாறும். எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலம் இது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நிலவி வந்த சிறு சிறு பிணக்குகள் நீங்கி நெருக்கம் கூடும். தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைப்பதால், உங்கள் வங்கி இருப்பு மார்ச் 23-க்குப் பின் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
துலாம் ராசி
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் அவர்கள் செய்யும் வேலையில் மிகப்பொரிய அங்கீகாரம் கிடைக்கப் போகிறது. நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த குடும்பப் பிரச்சனைகள் சுமூகமாக முடிவுக்கு வரும். குறிப்பாகச் சொத்து தொடர்பான விவகாரங்களில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு அல்லது உயர்வு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதிர்ஷ்டத்தின் முழுமையான துணை இருப்பதால், நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஒரு பொற்காலமாகவே கருதப்படுகிறது. உங்கள் மனதில் உள்ள விருப்பங்களை உங்கள் அன்புக்குரியவர்களிடம் வெளிப்படுத்த இதுவே மிகச்சரியான தருணம். முதலீடு தொடர்பான விஷயங்களில் இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் பெரும் கோடீஸ்வர யோகத்தைத் தேடித்தரும். தந்தை வழியில் இருந்த உடல்நலக் குறைபாடுகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
இந்த பதிவு பாரம்பரிய ஜோதிட மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை. பலன்கள் நபருக்கு நபர் மாறுபடலாம். இது தகவல் நோக்கத்திற்காக மட்டுமே.
