ரீமல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
ரீமல் புயலாக வலுப்பெற்று, இன்று (26-05-2024) காலை 05:30 மணி அளவில் “தீவிர புயலாக” வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இது இன்று (26-05-2024) காலை 0830 மணி அளவில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், வங்கதேச-கேப்புப்பாராவிற்கு, தெற்கு-தென்மேற்கே சுமார் 260 கி.மீ தொலைவிலும், வங்கதேச-மங்லாவிற்கு, தெற்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்காளம்-சாகர் தீவிற்கு, தெற்கு-தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும், வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (26-05-2024) நள்ளிரவு, வங்க தேச-கேப்புப்பாராவிற்கும், மேற்கு வங்காளம்-சாகர்தீவிற்கும் இடையே, வங்கதேச-மங்லாவிற்கு அருகில் கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரீமல் புயலால் பாதிக்கப்படும் பகுதிகள் :
• மேற்கு வங்காளம்
• கடலோர பங்களாதேஷ்
• திரிபுரா
• வடகிழக்கு மாநிலங்களின் பகுதிகள்.
#WATCH | Cyclone Remal | Purba Medinipur, West Bengal: NDRF teams deployed at Digha Beach. NDRF makes announcements requesting people to stay away from the beach.
As per IMD, cyclone ‘Remal’ is to make landfall today, at midnight between Bangladesh and adjoining West Bengal… pic.twitter.com/I4c0v18AEk
— ANI (@ANI) May 26, 2024
இந்நிலையில், இன்று (மே 26) முதல் தொடங்கும் பாதகமான வானிலைக்கு தயாராகுமாறு அதிகாரிகள் மற்றும் அங்குள்ள மக்களை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்திய வானிலைக்கான எச்சரிக்கை மே 28ம் தேதி வரை அமலில் உள்ளது. மேலும் புயல் கரையை கடந்ததும் அது பயணிக்கும் தடத்தை பொறுத்து எச்சரிக்கை நீட்டிக்கப்படலாம் என்று வானிலை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:
மேற்கு வங்கத்தை அச்சுறுத்தும் `ரிமல்’ புயல் – கொல்கத்தாவில் 400 விமான சேவைகள் ரத்து!
இந்நிலையில், ரீமல் புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே இன்று நள்ளிரவில் ரெமல் புயல் கரையை கடக்கிறது, புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 135 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)