நேற்று (23.03.2026) காலையில் தங்கம் விலை சவரனுக்கு 5,360 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் சவரனுக்கு மேலும் 2,240 ரூபாய் என 7,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு கிராம் 12,670 ரூபாயாக சரிந்தது பொதுமக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், மாலையில் மூன்றாவது முறையாக விலையில் மாற்றம் ஏற்பட்டு தங்கம் விலை குறைந்த வேகத்தில் அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 5,360 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,06,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், கிராமுக்கு ரூ.670 உயர்ந்து, ஒரு கிராம் 13,340-க்கு விற்பனையானது.


