உலகம் முழுவதும் வட்டி விகிதங்கள் உயர்ந்துள்ளதால், இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கடுமையாகச் சரிந்துள்ளன. அதன்படி, நேற்று (திங்கட்கிழமை) காலையில் தங்கம் விலை சவரனுக்கு 5,360 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் சவரனுக்கு மேலும் 2,240 ரூபாய் என 7,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு கிராம் 12,670 ரூபாயாகச் சரிந்தது பொதுமக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஆனால், மீண்டும் மாலை உயர்ந்தது.


