Last Updated:
தமிழக அரசின் விளையாட்டு விடுதிகளில் சேர வரும் 26ம் தேதி வரை ‘ஆன்லைனில்’ விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி, தங்குமிடம், சத்தான உணவு வசதியுடன் விளையாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. விளையாட்டில் சிறந்து விளங்கும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் வரும் 26ம் தேதி மாலை 5:00 மணி வரை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். மேலும், தகவல்களுக்கு ஆணையத்தின் ஆடுகள தகவல் தொடர்பு மையத்தின் 95140 00777 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய, அரசு விளையாட்டு விடுதிகள், விளையாட்டில் திறமையுள்ள பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு இலவச தங்குமிடம், சத்தான உணவு, தகுதிவாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் நவீன பயிற்சி, விளையாட்டு உடைகள், மற்றும் கல்வி உதவித்தொகை போன்ற அனைத்தையும் இலவசமாக வழங்கி அவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி தேசிய/சர்வதேச அளவில் சாதனை படைக்க உதவுகின்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (SDAT) விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் சுமார் 2,600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தடகளம், நீச்சல், வாள்சண்டை, படகோட்டுதல், கபடி போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குகின்றனர். ஆர். வைஷாலி (சதுரங்கம்) போன்றோர் அரசு பணியிட ஒதுக்கீட்டில் பயனடைந்து உலகளவில் சாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Mar 24, 2026 10:40 AM IST


