• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலகிலேயே அதிக ஊதியம் வாங்கும் தமிழர் இவர்தான்!

GenevaTimes by GenevaTimes
May 26, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
உலகிலேயே அதிக ஊதியம் வாங்கும் தமிழர் இவர்தான்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியர்கள் இந்தியா மட்டும் இல்லாமல் பல உலக நாடுகளின் பெரிய நிறுவனங்கள், அரசு பணிகள், நிறுவனத்தின் தலைமை பொறுப்புகளில் இருக்கின்றனர். அவர்களுக்கான மதிப்பும் மரியாதையும் உலக அளவுகளில் பேசப்படுகின்றன. அப்படி வெளி நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் யார் என்று யோசித்ததுண்டா?

இப்போது அதற்கான விடையையும் அவர் பற்றிய கதைகளையும் அவரது உலக மதிப்பையும் தான் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.  வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள், மற்றும் இந்திய வம்சாவளிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் ஒரு தமிழர் என்று சொன்னால் நம்புவீர்களா? உண்மைதான் உலகின் தலைசிறந்த தேடுபொறியாக இருக்கும் கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை தான் அந்த பெருமைக்கு உரியவர்.

விளம்பரம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் உலகின் பணக்கார நிர்வாகிகளில் ஒருவராக திகழ்கிறார். 1 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் சந்தை இருப்பை கொண்ட ஒரு நிறுவனத்தை அவர் வழிநடத்துகிறார் என்றால் தனி கெத்து தானே! அவர் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி.

சுந்தர் பிச்சை மதுரையில் பிறந்தவர். அவரது தாயார் லட்சுமி ஒரு  ஸ்டெனோகிராபர் . இவருடைய தந்தை ரெகுநாத பிச்சை ஒரு மின் பொறியாளர். மதுரையில் பள்ளி படித்த இவர், ஐஐடி காரக்பூரில் உலோகவியலில் பொறியியல் படித்தார். அவர் தனது படிப்பில் கவனமாக இருந்து பாடங்களில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியலில் எம்.எஸ். பின்னர் வார்டன் பள்ளியில் எம்பிஏ படித்தார்.

விளம்பரம்

2004 ஆம் ஆண்டு கூகுளில் தயாரிப்பு மேலாளராக சேர்ந்தார். கூகுள் குரோம் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். 2008 இல், அவர் துணைத் தலைவர் பதவிக்கு மாற்றப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரானார். 2014 இல், அவர் தயாரிப்பு தலைவரானார். பின்னர், 2015 இல் Google இன் CEO ஆனார்.

அது மட்டும் இல்லாமல் 2019-ல், கூகுள் நிறுவனத்தில்  தாய் நிறுவனமான Alphabet Inc இன் CEO ஆனார். கல்லூரி படிக்கும் போது  அஞ்சலியை சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் கோட்டாவைச் சேர்ந்தவர். ஐஐடி காரக்பூரில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிக்கும்போது தான் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

விளம்பரம்

News18

பிச்சை தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கு முன்பு, பல நிறுவனங்கள் அவரை தங்கள் நிறுவங்கங்களுக்கு ஈர்க்க விரும்பின. இருப்பினும் கூகுளில் இருந்து விலக வேண்டாம் என அவரது மனைவி கேட்டுக் கொண்டாராம். அதனால் தான் இப்பொது இந்த நிலையில் இருக்கிறார். மேலும் அவரை பற்றி பார்த்தால், அவர் ஒரு கிரிக்கெட் விரும்பி.

இதையும் படிங்க : ஐடி துறையில் ஆட்குறைப்பு : ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஊழியர் அதிரடி பணிநீக்கம்!

இவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் சுந்தர் பிச்சையின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு என்று பார்க்கும்போது, 2022-ல் சுந்தர் பிச்சையின் சம்பளம் 226 மில்லியன் டாலர்கள். இதன் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் ரூ.1,869 கோடியாம். இந்தத் தொகையில் 218 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்கு விருப்பத் தொகையும் அடங்கும். அதாவது கூகுள் நிறுவனத்தில் 218 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு சுந்தருடையது.

விளம்பரம்

இவை மட்டும் இல்லாமல்  2019 ஆம் ஆண்டில், அவர் 281 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையாக பெற்றார். ஹுருன் பட்டியலின்படி, 2022 இல் அவரது நிகர மதிப்பு 1310 மில்லியன் டாலர்கள் அல்லது ரூ.10215 கோடி. அவரது வீடு மட்டும் 4,429 சதுர அடி பரப்பளவில் ரூ.10,215 கோடி மதிப்பிலானதாக இருக்கிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

இந்த 5 கிரெடிட் கார்டுகளில் ஒன்று உங்களிடம் இருந்தா போதும்.. ஜாலியா ஊர் சுற்றலாம்

Next Post

மலேசிய சீன சங்கக் கூட்டமைப்பில் பெரிக்காத்தானுக்கு பலன் இல்லை – Malaysiakini

Next Post
மலேசிய சீன சங்கக் கூட்டமைப்பில் பெரிக்காத்தானுக்கு பலன் இல்லை – Malaysiakini

மலேசிய சீன சங்கக் கூட்டமைப்பில் பெரிக்காத்தானுக்கு பலன் இல்லை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin