• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நாட்டின் 50% எண்ணெய் விநியோகம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது – பிரதமர் – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
March 23, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் போர்ச் சூழலால் எண்ணெய் விலையேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மலேசியா ஓர் எண்ணெய் உற்பத்தி நாடாக இருந்தும் ஏன் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பிரதமர் அன்வார் இப்ராஹிம் விளக்கியுள்ளார்.

நிதி அமைச்சருமான அவர் கூறுகையில், மலேசியா இன்னும் நிகர எண்ணெய் இறக்குமதி நாடாகவே இருப்பதாகவும், நாட்டின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 50% ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருவதாகவும் தெரிவித்தார்.

“மலேசியர்களைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கத்தின் மானியம் (மாதத்திற்கு) 700 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

இந்த மானியங்கள் BUDI95 மற்றும் BUDI டீசல் திட்டங்கள் மூலம் வழங்கப்படுவதால், பொதுமக்கள் மற்றும் பெரும்பான்மையான வணிகர்கள் சந்தை விலையை செலுத்த வேண்டிய அவசியமில்லை.

உலகளாவிய நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியிலும், மக்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே மடானி அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாகும்,” என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் அரசாங்கம் RON97 பெட்ரோல் விலையை 1.30 ரிங்கிட் உயர்த்தியுள்ளது, அதே சமயம் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 1.60 ரிங்கிட் அதிகரித்துள்ளது.

மானியம் இல்லாத RON95 பெட்ரோல் விலையும் 60 காசுகள் உயர்ந்துள்ளது.

எரிபொருள் விலையை மானிய விலையிலேயே தக்கவைக்க, அரசாங்கத்திற்கு மாதந்தோறும் 3.2 பில்லியன் ரிங்கிட் மானியச் செலவு ஏற்படும் என புத்ராஜெயா மதிப்பிட்டுள்ளது. இதில் RON95 பெட்ரோலுக்கு 2 பில்லியன் ரிங்கிட் மற்றும் கிழக்கு மலேசியாவில் தொடர்ந்து மானிய விலையில் விற்கப்படும் டீசலுக்கு 1.2 ரிங்கிட் பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 100 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

 

 

-fmt



Read More

Previous Post

ஐடா கீலிங்: 100-வது வயதில் உலகை வென்ற பெண்ணின் கதை; துயரங்களை முறியடித்த தடகளத் தாரகையைத் தெரியுமா?

Next Post

இலங்கையில் பேருந்து கட்டணம் உயர்வு? அமைச்சரவைக்கு இன்று முக்கிய முன்மொழிவு – Sri Lanka Tamil News

Next Post
இலங்கையில் பேருந்து கட்டணம் உயர்வு? அமைச்சரவைக்கு இன்று முக்கிய முன்மொழிவு – Sri Lanka Tamil News

இலங்கையில் பேருந்து கட்டணம் உயர்வு? அமைச்சரவைக்கு இன்று முக்கிய முன்மொழிவு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin