இஸ்ரேலும் அமெரிக்காவும் என்னதான் அழிவுகளை ஏற்படுத்தினாலும் தாம் இன்னமும் உறுதியுடன்தான் அதாவது தாக்கும் திறனில்தான் உள்ளோம் என்பதை 4000 கிலோ மீற்றருக்கு அப்பால் இரண்டு ஏவுகணைகளை செலுத்தி உறுதிப்படுத்தியுள்ளது ஈரான்.
போர் தொடங்குவதற்கு முன்னர் ஈரானிடம் 2500 கிலோ மீற்றர் சென்று தாக்கும் ஏவுகணைகளே உள்ளன என்றும் அது 5000 கிலோ மீற்றர் சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரிப்பதற்கு முன்னரே அதன் செயற்பாட்டை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் அமெரிக்கா தெரிவித்திருந்தது.
ஆனால் ஈரானிடம் இப்படி நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் இருக்கும் என்பதை அமெரிக்கா உட்பட எந்த நாடும் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் உலகின் பல கண்டங்களை தனது தாக்குதல் வீச்சுக்குள் ஈரான் கொண்டுவந்துள்ளது என்பதுதான்.
இதேவேளை நேற்றிரவு இஸ்ரேலின் அணு நிலைகள் ,அணுவாயுதங்கள் இருப்பதாக நம்பப்படும் டிமோனா மற்றும் அரத் போன்ற இடங்களில் ஈரான் மேற்கொண்ட பலஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களும் ஈரானின் தாக்குதல் பலத்தை பறைசாற்றுவதாக இருக்கின்றது.
இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலின் நேரடி காட்சிகள் மற்றும் அங்குள்ள தற்போதைய நிலை தொடர்பில் இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் காணலாம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

