இலங்கையில் 2022 இல் கோட்டாபய ராஜபக்சவை விரட்டியடித்த அரகலய காலத்தில் நிலவிய எரிபொருள் விலை ஏறக்குறைய இலங்கையருக்கு மீண்டும் வந்துவிட்டது.
நேற்று (21) நள்ளிரவுக்குப் பின்னர் மீண்டும் ஒருமுறை எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டமை இனிமேல் பேருந்து கட்டணங்களின் உயர்வு உட்பட்ட சகல விலையேற்றங்களுக்குரிய ஒரு பாதக டொமினோ ஆட்டத்தை நடத்தப்போகிறது.
இந்த விலையேற்றம் இன்னும் மக்களின் பணப்பைகளை சரசரவென பதம்; பார்க்கும் சாத்தியப்பாடுகளை அதிகரிக்கும் என்பது நிதர்சனம்.
தற்போது நாட்டில் மீண்டும் தலையெடுத்த இந்த எரிபொருள் நெருக்கடியில் எப்படியாவது காசு பார்த்து விடவேண்டும் என்ற பதுக்கல் மாபியாயும் முளைத்து விட்டதால் இதுவரை போதை மாபியா மற்றும் பாதாள உலக முகங்களை தேடிய காவற்துறை இப்போது எரிபொருளைப் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மாபியாவையும் பிடிக்க தேடுதல்களை நடத்தும் புதிய தலையிடியும் வந்துள்ளது.
இலங்கையில் இப்போது நடைமுறையில் உள்ள QR எனப்படும் துரித பதிலளிப்பு பங்கீட்டுமுறை நாட்டின் எரிபொருள் பாவனையை உண்மையாக குறைக்காமல் செயற்கையாகத்; கட்டுப்படுத்த முயற்சிப்பதால் இந்தமுறை இனி சரிவராது என்பதாக கிசுகிசுப்புகள் உள்ள நிலையில் புதிய சீர்திருத்தம் என்ற அடிப்படையில் எரிபொருள் விலைகள் நேற்று நள்ளிரவில் உயர்த்தப்பட்டதாக தெரிகிறது.
இவ்வாறான போதும் போதும் என எரியும் நெருக்கடிகளை கொண்டுள்ள இலங்கையின் போதாத காலமோ என்னவோ இந்து சமுத்திரத்தின் டியாகோ கார்சியா மீது ஈரான் ஏவிய இரண்டு பலிஸ்ரிக் ஏவுகணைகளின் பின் அதிர்வுகள் இலங்கைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டொனால்ட் ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணையை மையப்படுத்தி ஈரானுக்கு விடுத்த 48 மணி நேரத்துக்குள் கால அவகாசம் முதலான விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு….
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

