Last Updated:
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 23ஆம் தேதியோடு அதற்கான அவகாசம் நிறைவடைகிறது.
புதுச்சேரியில், என்.ஆர். காங்கிரஸ் – பாஜகவின் என்.டி.ஏ. கூட்டணியும், திமுக – காங்கிரஸின் கூட்டணியும் அமைந்துள்ளது. என்.டி.ஏ. கூட்டணியில், பாஜக, என்.ஆர். காங்கிரஸ், ல.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில், என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் லஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தலா இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, உப்பளம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் மற்றும் உருளையன்பேட்டை தொகுதியில் காந்தி என்பவரும் போட்டி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Puducherry (Pondicherry)


