• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உள்நாட்டு விமானங்களுக்கான உச்ச வரம்பு கட்டுப்பாட்டை நீக்குகிறது மத்திய அரசு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 22, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உள்நாட்டு விமானங்களுக்கான உச்ச வரம்பு கட்டுப்பாட்டை நீக்குகிறது மத்திய அரசு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 22, 2026 10:57 AM IST

பண்டிகை காலங்கள் அல்லது அவசர காலங்களில் விமான நிறுவனங்கள் கட்டணத்தை அதிகமாக உயர்த்தினால், அரசு மீண்டும் தலையிட்டு நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான சேவை
விமான சேவை

உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு கட்டுப்பாட்டை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவையில் ஏற்பட்ட குளறுபடியைப் பயன்படுத்தி பயணிகளிடம் இருந்து பிற விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க உள்நாட்டு விமான சேவைக்கு அதிகபட்சம் 18,000 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கலாம் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்திருந்தது. 500 கிலோமீட்டர் வரை 7,500 ரூபாய் வரையும், ஆயிரம் கிலோ மீட்டர் வரை 12,000 ரூபாய் வரையும் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது விமான சேவை சீரடைந்துள்ளதால், இந்த உச்சவரம்பு திங்கட்கிழமை முதல் நீக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. கட்டணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும், விமான நிறுவனங்கள் தன்னிச்சையாகக் கட்டணத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தக் கூடாது என்றும் நியாயமான முறையில் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாதிரி படம்

பண்டிகை காலங்கள் அல்லது அவசர காலங்களில் விமான நிறுவனங்கள் கட்டணத்தை அதிகமாக உயர்த்தினால், அரசு மீண்டும் தலையிட்டு நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், இந்த கட்டண உச்சவரம்பை நீக்குமாறு விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது கவனிக்கத்தக்கது.

First Published :

Mar 22, 2026 10:57 AM IST

Read More

Previous Post

எரிபொருள் விலை அதிகரிப்பு! அரசாங்கத்திற்கு நாமல் கூறும் அறிவுரை

Next Post

24 மணிநேர கெடு: ஈரானிய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டது சவூதி அரேபியா! | Makkal Osai

Next Post
24 மணிநேர கெடு: ஈரானிய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டது சவூதி அரேபியா! | Makkal Osai

24 மணிநேர கெடு: ஈரானிய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டது சவூதி அரேபியா! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin