Last Updated:
Puducherry DMK | புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி அரசியலில் நடப்பது என்ன?
புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி அரசியலில் நடப்பது என்ன?
புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 17 இடங்களில் போட்டியிட விரும்பிய காங்கிரஸ், திமுகவிற்கு 11 தொகுதிகளும் விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களும் ஒதுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், 30 தொகுதிகளையும் சரி சமமாக பிரிக்க திமுக கூறியதாக கூறப்படுகிறது.
வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை ஒருநாள் மட்டும் உள்ளதால் சனிக்கிழமை தொகுதி பங்கீடை நிறைவு செய்ய திட்டமிட்டு, ஜெகத்ரட்சகன் எம்பி உள்ளிட்ட குழுவினர் தனியார் ஹோட்டலில் காலை 10 மணி முதல் காத்திருந்தனர்.
சுமார் 12 மணி நேரம் காத்திருந்தும் காங்கிரஸ் குழுவினர் வராததால் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் சென்னை புறப்பட்டனர். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை தொடரவே திமுக விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், தனியார் விடுதியில் கிரிஷ் ஜோடங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெற்ற நிலையில், திமுக உடனான பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை.
இதற்கிடையே, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆளும் என்.ஆர்.காங்கிரஸூக்கு 16, பாஜக 10, அதிமுக, லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எவை என அறிவித்தார். கூட்டணி தர்மத்திற்காக அதிமுக குறைந்த இடங்களில் போட்டியிடுவதாகவும் அன்பழகன் கூறினார். மேலும், முதலமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை ஏற்றுக் கொள்வதாகவும் அன்பழகன் தெரிவித்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
12 மணி நேரம் காத்திருந்தும்… திமுகவுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ் – புதுச்சேரி அரசியலில் நடப்பது என்ன?


