Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி ரம்ஜான் வாழ்த்து கூறி, ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்பு தாக்குதலை கண்டித்தார்; ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு, இஸ்ரேல் பயணம் விவகாரம் பேசுபொருள்.
ஈரான் அதிபருக்கு தொலைபேசி வாயிலாக ரம்ஜான் வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுக்கு தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ரம்ஜான் வாழ்த்து கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் பிரச்சனை குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும், ஈரானில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை தடைபட்டுள்ளது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்ததாகவும், மேற்கு ஆசியாவில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழலுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான முறையில் எண்ணெய் வர்த்தகம் நடைபெறுவதை ஈரான் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் குறித்து ராகுல் காந்தி கேள்வியெழுப்பி இருந்த நிலையில், போர் தொடங்குவதற்கு 25 நாட்களுக்கு முன்பே பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
Delhi,Delhi,Delhi
ஈரான் அதிபருக்கு ரம்ஜான் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி.. உள்கட்டமைப்பு மீதான தாக்குதலுக்கு கண்டனம்!

