மத்திய கிழக்கு போர்சார்ந்த ஒரு நெருக்கடி சாமானிய தமிழர்களை இறுக்கினாலும் அவர்களின் அரசியல்முகங்களில் சில சதிகள் வசைபாடல்கள் திரைமறைவுத் திட்டங்களையெல்லாம் போசித்து அரசியல் செய்யும் முகங்களாகவே உள்ளன.
இதனால் தமிழர்களின் வடபுல அரசியலில் மீண்டும் அசிங்கத்தனமான வாதம் வலிப்பு மற்றும் பிராந்தியவாத பித்தங்கள் கிளிநொச்சி இரணைமடு நீர் சார்ந்த இழிநிலை அலப்பறைகளாக வருகின்றன.
கிளிநொச்சி மக்கள் குறித்து காதுகொடுத்து கேட்கமுடியாத விசமத்தன கருத்துக்களை பதிவிடும் அட்டைக்கத்தி சுழற்றல் கிளாடியேற்றர்கள் யாழ்ப்பாணத்தில் தான் நிறைய படித்தஆக்கள் இருப்பதாக குறிப்பிட்டு தமிழ்மக்களை பிராந்திய வாதமாக குழப்பும் இந்த விசமங்களை செய்து மெத்தையில் வைத்தாலும் அட்டை செத்தையை செத்தையை தான் நாடும் என்பதை இன்னொரு முறை நிருபிக்கின்றன
ஆனால் இவ்வாறான அலப்பறைகளுககு அப்பால் ஒட்டுமொத்த இலங்கையின் பிரச்சினையாக எரிசக்தி நெருக்கடியும் இந்து சமுத்திரத்தில் உள்ள டியார்கோ – கார்சியா வரை ஈரானிய ஏவுகணைகள் சீறின என்ற புதிய செய்திகளாகவும் வந்துவிட்டன.
இலங்கைக்குள் ஒரேநேரத்தில் நுழைவதற்கு அமெரிக்கா மற்றும் ஈரானிய போர்க்கலங்கள் அனுமதிகோரியபோதும் நாட்டின் நடுநிலைமை காரணமாக அதனை மறுத்தோம் என கடந்த மாத கதையை அனுர நேற்று சொன்னாலும் எதிர்காலத்தில் இந்த நடுநிலை எப்படி போகும் என்ற நிலையை இந்துசமுத்திரத்துக்கும் போர்விவாகும நிலையின் அறிகுறிகள் வருவதால் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
