• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“அப்படி நடந்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” – ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஈரான் எச்சரிக்கை! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 21, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
“அப்படி நடந்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” – ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஈரான் எச்சரிக்கை! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 21, 2026 1:43 PM IST

தனது எல்லைகளில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை ஈரான் துல்லியமாக தாக்கியுள்ளது. ஈரானின் ஏவுகணைகளின் வரம்பு 2,000 கிலோ மீட்டர்தான் என கூறப்பட்ட நிலையில், இது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஈரான் எச்சரிக்கை
ஈரான் எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலப்பரப்பை பயன்படுத்தி தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதலை தொடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன்னை சுற்றியுள்ள வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை கண்டித்து சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஈரானுக்கு எதிராக 12 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டன. மேலும் இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவத் தளமான டீகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, தனது எல்லைகளில் இருந்து சுமார் 4,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை ஈரான் துல்லியமாக தாக்கியுள்ளது.

ஈரான் - தோராயமாக 157-158 பில்லியன் பீப்பாய்கள்... இந்த பட்டியலில் ஈரான் மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடன் ஈரான் வலுவான உறவுகளை கொண்டுள்ளது. ஆனால், அமெரிக்காவுடனான உறவுகள் பல தசாப்தங்களாக பதட்டமாகவே உள்ளன. பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் தனது எண்ணெய்த் துறையைப் பராமரிக்க முயற்சித்து வருகிறது.

ஈரான்

ஈரானின் ஏவுகணைகளின் வரம்பு 2,000 கிலோ மீட்டர்தான் கூறி வந்த நிலையில், 4,000 கிலோ மீட்டருக்கு தாக்குதல் நடத்தியது பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலப்பரப்பில் இருந்து அபு மூசா மற்றும் கிரேட்டர் டன்ப் தீவுகளை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்படுவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. அவ்வாறு தாக்குதல் நடத்தும் பட்சத்தில், ஐக்கிய அரபு அமீரகம் மீது கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என தென்கொரியா வலியுறுத்தியுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, கனடா ஆகிய 7 நாடுகள் வெளியிட்ட கூட்டு அறிக்கைக்கு தென்கொரியா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு ஐ.நா. உதவும் என்று அதன் தலைவர் அன்டோனியா குட்​டரேஸ் கூறியுள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

“அப்படி நடந்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” – ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஈரான் எச்சரிக்கை!

Read More

Previous Post

கடும் மின்னல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: 4 மாவட்டங்களுக்கு அறிவிப்பு – Sri Lanka Tamil News

Next Post

சிங்கப்பூருக்குள் போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற மலேசியர் உள்ளிட்ட இருவர் கைது | Makkal Osai

Next Post
சிங்கப்பூருக்குள் போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற மலேசியர் உள்ளிட்ட இருவர் கைது | Makkal Osai

சிங்கப்பூருக்குள் போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற மலேசியர் உள்ளிட்ட இருவர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin