Last Updated:
அனைத்து சாதிகள் மற்றும் மதத்தினருடன் தான் துணை நிற்பதாகக் கூறியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மக்களின் உரிமையைப் பறிக்க பிரதமர் மோடியை அனுமதிக்க மாட்டோம் என்று சூளுரைத்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தங்களது மாநிலத்தை குறிவைத்து மக்களைப் பிரிக்க முயற்சிப்பவர்கள் நரகத்திற்குச் செல்ல வேண்டும் என்று சாபம் விடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்று உரையாற்றிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையின் மூலம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக சாடினார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், இதன்மூலம் மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா | CM Mamata Banerjee
மாநிலத்தில் உள்ள அனைத்து சாதிகள் மற்றும் மதத்தினருடன்தான் துணை நிற்பதாகக் கூறிய மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி நமது உரிமையை பறிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக அரசு முயற்சி செய்தபோதும் தான் அஞ்சவில்லை என்றும் மம்தா கூறினார். பாஜக என்பது திருடர்கள் மற்றும் துரோகிகளின் கட்சி என்றும் மம்தா பானர்ஜி விமர்சித்தார்.


