• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“மகளிர் உதவித் தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்” – தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட மம்தா பானர்ஜி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 21, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“மகளிர் உதவித் தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்” – தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட மம்தா பானர்ஜி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 21, 2026 7:03 AM IST

West Bengal Election 2026: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 10 வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி வெளியிட்டார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உதவித் தொகை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 10 வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி வெளியிட்டார்.

அதன்படி, மகளிருக்கான மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும், எஸ்.சி., எஸ்.டி., மகளிருக்கு மாத உதவித்தொகை ஆயிரத்து 700 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் எனவும்,அனைத்து குடும்பத்திற்கும் சொந்த வீடு இருப்பது உறுதி செய்யப்படும் எனவும் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.

விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காக ரூ.30,000 கோடியில் வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்படும் எனக் கூறியுள்ள திரிணாமுல் காங்கிரஸ், அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.

VIDEO | West Bengal Assembly Elections 2026: CM Mamata Banerjee (@MamataOfficial), while releasing the TMC manifesto, says, “An unofficial President’s rule has been imposed in Bengal because the BJP knows it will be defeated in the upcoming Assembly polls. Is PM Modi so afraid of… pic.twitter.com/HTTrxeBuRA


— Press Trust of India (@PTI_News) March 20, 2026

தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, மேற்கு வங்கத்தை திரிணாமுல் காங்கிரசால் மட்டுமே காக்க முடியும் என்றார்.

அனைவருக்கும் வளர்ச்சி எனக் கூறும் பாஜக அனைவருக்கும் அழிவை தந்துவருவதாகவும் மம்தா விமர்சித்தார்.

இதையும் படிங்க: பஹ்ரைனில் எரிசக்தி, உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் : பிரதமர் மோடி கண்டனம்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் தோற்கடிக்கப்படுவோம் என்பது பாஜகவுக்குத் தெரிந்திருப்பதால், வங்காளத்தில் அதிகாரப்பூர்வமற்ற குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய மம்தா, “பிரதமர் மோடிக்கு வங்காள மக்களைக் கண்டு அவ்வளவு பயமா?” எனவும் கேள்வி எழுப்பினார்.

Read More

Previous Post

இடியுடன் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

“பிசிசிஐ-யின் நிற பாகுபாடு!” – பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் கடும் குற்றச்சாடு… அஸ்வின் வேதனை!

Next Post
“பிசிசிஐ-யின் நிற பாகுபாடு!” – பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் கடும் குற்றச்சாடு… அஸ்வின் வேதனை!

“பிசிசிஐ-யின் நிற பாகுபாடு!” - பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் கடும் குற்றச்சாடு... அஸ்வின் வேதனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin