யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் புதிய பீடாதிபதியாகப் புவியியற்றுறைப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பதவியில் இருந்த கலைப்பீட பீடாதிபதியான ரகுராமனின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய பீடாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு நேற்று (20-03-2026) இடம்பெற்றுள்ளது.
அதிக வாக்கு
இந்நிலையில், அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர் என்ற அடிப்படையில் நாகமுத்து பிரதீபராஜா கலைப்பீட பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த காலங்களில் வானிலை ஆய்வுகளைத் துல்லியமாகக் கணித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

