Last Updated:
உத்தரப்பிரதேசத்தில் தனது உயிருக்கு பயந்து மனைவியை அவரது காதலனுக்கே கணவர் தாரை வார்த்து கொடுத்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பின்னணி என்ன?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவனை, காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்ய திட்டம் போட்டிருந்த மனைவியை, உயிருக்கு பயந்து காதலனுக்கே தாரை வார்த்து கொடுத்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. blue drum effect தாலி கட்டிய கணவனை தயங்க வைத்ததன் பின்னணி என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தர்ஷாவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு மனைவி மற்றும் 6 மாத குழந்தை ஒன்று உள்ளது. திருமணம் ஆனதிலிருந்து கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் அடிக்கடி கோபித்துக் கொண்டு வெளியே சென்றுவிடும் மனைவி, இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து சாவகாசமாக வீட்டுக்கு வருவார். இதனால் மனைவியின் நடத்தை மீது கணவனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உண்மையைக் கண்டறிய மனைவியை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தார் ராஜ்குமார்.
ஒரு நாள் காதலனுடன் செல்போனில் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார் மனைவி. அதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், பதுங்கிச் சென்று செல்போனை வெடுக்கென்று பிடுங்கியிருக்கிறார். அப்போது, செல்போனில் பேசிய நபர் இணைப்பை துண்டித்ததும், கடும் ஆத்திரம் அடைந்திருக்கிறார் ராஜ்குமார். பிறகு செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் ஏராளமான ஆபாசப் படங்கள் இருந்துள்ளன.
மனைவியின் பேஸ்புக்கை திறந்து பார்த்தபோது அதில் ஏராளமான கள்ளக்காதல் கொலைகள் குறித்த செய்திகள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். கடந்த ஆண்டு மீரட்டில் முஸ்கான் என்ற பெண் கணவன் சவுரப்பை துண்டு துண்டாக வெட்டி நீல நிற ட்ரம்மில் அடைத்து சிமெண்ட் கலவையை ஊற்றி செப்டிக் டேங்கில் போட்டு அடைத்த செய்தியை அடிக்கடி படித்துப் பார்த்திருக்கிறார் ராஜ்குமாரின் மனைவி.
மிரண்டுபோன அவர், அது குறித்து மனைவியிடம் கேட்டபோது, ஆமாம் என்றும் கூறாமல், இல்லை என்றும் கூறாமல் ஒரு மாதிரியாக தலையை அசைத்திருக்கிறார். உடனே ராஜ்குமார் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளார். தயவு செய்து தங்களது திருமண உறவை முறித்துவிடுமாறும், தினசரி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தன்னால் வாழ முடியாது என்றும் ஊர் பெரியவர்கள் முன்பு கதறியிருக்கிறார். இதனால் பரிதாபப்பட்ட பஞ்சாயத்தார், அந்தப் பெண்ணிடம் கேட்க, அவரோ தனது காதலனுடன் செல்வதாகக் கூற பெரும் நிம்மதி அடைந்தார் ராஜ்குமார்.
Mar 20, 2026 10:24 PM IST
கணவனை வெட்டிக் கொல்வது எப்படி…? இணையத்தில் தேடித்தேடி படித்த மனைவி… செல்போனைப் பார்த்து பதறிப்போன கணவன்…


