வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக நாளை (21) காலை 8.00 மணிக்கு வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
சீரான சேவைகள் இல்லாத காரணத்தால் அவற்றை
சீர் செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
வைத்தியசாலைக்கு தாதியர் இன்மை, 24 மணிநேர சேவையின்மை, நோயாளர் காவு வண்டியை
காரைநகர் வைத்தியசாலைக்கு வழங்கியமை, வைத்தியசாலையில் காணப்படுகின்ற
குறைபாடுகள் போன்றவற்றுக்கு தீர்வு கோரி இந்த போராட்டமானது நோயாளர் நலன்புரி
சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே குறித்த போராட்டத்தில், அந்த வைத்தியசாலையை பயன்படுத்தும் அனைத்து
தரப்பினரையும் இணையுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

