முதலில் செய்ய வேண்டியது…
இப்போது சந்தையில் டாக் – ஈரான் போர் முடிகிறது என்பது தான். அதனால், போருக்குப் பின் எந்தத் துறைகள் பவுன்ஸ்பேக் வரும் என்று பாருங்கள்.
அந்தத் துறைகளில் உலோகங்கள், கட்டமைப்பு, இன்ஜீனியரிங், சிமென்ட் போன்றவற்றில் ஏற்றம் இருக்கும். இப்படி எந்தெந்த துறைகளில் ஏற்றம் இருக்கும் என்று இப்போதே ஆராய்ந்து வைத்தால், பின்னால் செய்யப்போகும் முதலீட்டுக்கு உதவிகரமாக இருக்கும்.
இன்னொன்று, ஒரே நேரத்தில் இந்தத் துறைகளில் முதலீடு செய்யாமல், கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்ய இப்போதே வாய்ப்பு இருக்கிறது என்பதையும் கவனிக்கலாம்.

ம்ம்ம்… கிளப்புங்கள்
எஸ்.ஐ.பி புதிதாக தொடங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல காலம்.
பொதுவாக சந்தையில் லாபம் பார்க்க இருக்கும் கோல்டன் ரூல் – சந்தை இறங்கினால் வாங்க வேண்டும்… ஏறினால் விற்க வேண்டும்.
அப்படி பார்த்தால், இப்போது சந்தையில் 10 – 12 சதவிகித கரெக்ஷன் நடந்திருக்கிறது. அதனால், முதலீட்டை தொடங்க இது நல்ல நேரமே.
இப்போது போர் தொடர்ந்துகொண்டிருப்பதால், கச்சா எண்ணெயில் நல்ல டிரேடிங் வாய்ப்பு காத்திருக்கிறது. அதைப் பயன்படுத்தலாம்”.

