• Login
Friday, March 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் போர் ட்ரம்பை காயப்படுத்துகிறது! – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
March 20, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
ஈரான் போர் ட்ரம்பை காயப்படுத்துகிறது! – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்தியக்கிழக்கில் நிலவி வரும் பதற்றமானது இஸ்ரேலியப் பிரதமரின் நிபந்தனைகளுக்கு ஏற்ப இஸ்ரேலின் அரசியல் வரைபடத்தை மாற்றியமைத்துள்ளது என்றும், இது காசாவிலிருந்து கவனத்தை ஈரான் பக்கம் திருப்பியதோடு, தெளிவான தீர்வு இல்லாத ஒரு மோதலில் அமெரிக்க அதிபரையும் சிக்க வைத்துள்ளது எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் நாளையே முடிவுக்கு முடிவுக்கு வந்தால், இதன் அடிப்படை இப்போதே தெளிவாகிவிட்டது.

ஆம். இதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேலும் வலுப்பெறுவதோடு, அதே சமயம், உலகளாவிய சந்தைகளுக்கும், மிகக் கடுமையான இழப்புகளைச் சந்தித்த வளைகுடா நட்பு நாடுகளுக்கும் ஏற்படவிருக்கும் அதிர்ச்சியைச் சமாளிக்கும் பொறுப்பு அமெரிக்க டொனால்ட் ட்ரம்புக்கு விடப்படும் என்பதே.

நேர்மாறான விளைவு


நெதன்யாகுவைப் பொறுத்தவரை, இந்தப் போர் அவரது நிபந்தனைகளுக்கு ஏற்ப இஸ்ரேலின் அரசியல் வரைபடத்தை மாற்றியமைத்துள்ளது என்றும், தேசிய ஒருமித்த கருத்து மிகவும் வலுவாக இருப்பதும், அவரது பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தகுதிகள் அதிகம் எதிரொலிப்பதுமான ஈரானை நோக்கி கவனத்தைத் திருப்பியுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஈரான் போர் ட்ரம்பை காயப்படுத்துகிறது! | The Iran War Is Hurting Trump


ட்ரம்ப்பைப் பொறுத்தவரை, இது நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தெளிவான தீர்வு இல்லாத ஒரு மோதலில் அவரைச் சிக்கவைத்து, அவரது வளைகுடா அரபு நட்பு நாடுகளை அதிகரித்து வரும் அபாயங்களுக்கு உள்ளாக்கி, அவர் மீண்டும் பதவிக்கு வர உந்துசக்தியாக இருந்த பொருளாதாரக் கதையை வலுவிழக்கச் செய்துள்ளது.


“ஒரு தெளிவான வெற்றியாளரும் ஒரு தெளிவான தோல்வியாளரும் உள்ளனர்,” என்று அமெரிக்காவின் முன்னாள் மத்திய கிழக்கு பேச்சுவார்த்தையாளரான ஆரோன் டேவிட் மில்லர் கூறினார்.

“நெதன்யாகுதான் சந்தேகத்திற்கு இடமின்றி முக்கிய வெற்றியாளர். அவர் இஸ்ரேலின் இராணுவத் திறனை நிரூபித்துள்ளார். இதில் வளைகுடா நாடுகள்தான் சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பெரிய தோல்வியாளர்கள்.”


ட்ரம்ப்பைப் பொறுத்தவரை, வெற்றியை அறிவித்துவிட்டு அவர் விலகிச் செல்ல அனுமதிக்கும் மாற்று வழி எதுவும் இல்லை என்று மில்லர் தெரிவித்துள்ளார்.

வெனிசுலா பாணியிலான எதிர்பார்ப்பு



ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று கோரிய ட்ரம்ப், வெனிசுலா பாணியிலான இணக்கமான அதிகாரத் தரகரான வெனிசுலாவின் தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கிய சக்திவாய்ந்த தலைவராக விளங்கும் ஒரு டெல்சி ரோட்ரிக்ஸைக் ஈரானிலும் காண நினைத்தார்.

ஈரான் போர் ட்ரம்பை காயப்படுத்துகிறது! | The Iran War Is Hurting Trump

ஆனால் அதற்குப் பதிலாக, வட கொரியாவின் சவால்விடும் சர்வாதிகார மாதிரியை நினைவுபடுத்தும் வகையில், “ஒரு ஈரானிய கிம் ஜாங்-உன்னைக் கண்டார்” என்று ஈரான் நிபுணர் கரீம் சத்ஜத்பூர் கூறியுள்ளார்.

அமெரிக்காவை போலல்லாமல், ஈரானுக்கு எதிரான போர் இஸ்ரேலில் விருப்பத்தின் பேரிலான போராக அல்ல.

மாறாக அவசியத்தின் பேரிலான போராகவே பரவலாகக் கருதப்படுகிறது என்று மத்திய கிழக்கு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் நாதன் சாக்ஸ் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஆட்சி மாற்றம் நிகழாவிட்டாலும் கூட, என்றும் சாக்ஸ் அடிகோடிட்டார்.

குறிப்பாக ஈரானையும் அது வழிநடத்தும் (போராளிகள்) கூட்டணியையும் பலவீனப்படுத்துவது நெதன்யாகுவின் ஒரு மிகப்பெரிய இலக்காகும். இது ட்ரம்புக்கு, கடினமான தேர்வுகளில் ஒன்று.


வான்வழிப் போர் பரவலாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேல் மேற்கு மற்றும் வடக்கு ஈரானில் கவனம் செலுத்தி, பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணுசக்தி தளங்களைத் தாக்குவதாகவும், அதே நேரத்தில் அமெரிக்கா ஈரானின் கடற்படைத் திறன்களை பலவீனப்படுத்தும் நோக்கில், ஹோர்முஸ் நீரிணை உள்ளிட்ட கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கவனம் செலுத்துவதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஈரானின் மூத்த தலைவர்களின் மரணம்

கடந்த செவ்வாயன்று பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி மற்றும் புதன்கிழமை உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் உட்பட, ஈரானின் மூத்த தலைவர்களின் படுகொலைகளுக்கு இஸ்ரேல் தலைமை தாங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் போர் ட்ரம்பை காயப்படுத்துகிறது! | The Iran War Is Hurting Trump

மேலும் ஒப்புதல் ஏதுமின்றி, தங்களால் கண்டறியக்கூடிய எந்தவொரு மூத்த ஈரானிய அதிகாரியையும் தாக்குவதற்கு இராணுவத்திற்குத் தானும் நெதன்யாகுவும் அதிகாரம் அளித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.

இருப்பினும், அந்த முன்னேற்றங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவரவில்லை.

இவ்வாறான பின்னணியிலேயே ட்ரம்புக்கு தற்போது சிக்கலான  மூன்று மோசமான தேர்வுகள் வந்துள்ளன.

1. தாக்குதல்களை நீட்டிப்பது,

2.வெற்றியை அறிவித்து தெஹ்ரான் பின்வாங்கும் என்று நம்புவது,

3. அல்லது போரை கடுமையாக அதிகரிப்பது

இவற்றில் எதுவுமே போரிலிருந்து தெளிவாக வெளியேறுவதற்கான வழியைத் தரவில்லை என்று ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.



இந்தச் செய்தி தொடர்பாகக் கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு வெள்ளை மாளிகை, அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் நெதன்யாகுவின் அலுவலகம் பதிலளிக்கவில்லை.


போர் தொடங்கியதிலிருந்து ஈரான் அரசாங்கம் பலவீனமடைந்திருந்தாலும், அது சிதையாமல் அப்படியே உள்ளது என்றும், தெஹ்ரானும் அதன் ஆதரவுப் படைகளும் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் நலன்களைத் தாக்கும் திறன் கொண்டவை என்றும் அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கபார்ட் புதன்கிழமை அன்று அமெரிக்க காங்கிரஸிடம் தெரிவித்தார்.

தவறான கணிப்பு

இவ்வாறான நிலையே தற்போது ட்ரம்பின் வெளிப்படையான தவறான கணிப்பு வளைகுடாப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஈரான் போர் ட்ரம்பை காயப்படுத்துகிறது! | The Iran War Is Hurting Trump

அத்தோடு, ஈரான் வர்த்தக மையங்கள் மீது ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவி, உலகளாவிய எண்ணெயில் ஐந்தில் ஒரு பங்கிற்கான தமனியான ஹோர்முஸ் வழித்தடத்தை நெரித்து வருவதால், வளைகுடா நாடுகளே மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

வளைகுடா அரபு நாடுகள் இப்போது உணரும் பொதுவான அச்சுறுத்தல் என்பது, வளைகுடாவின் எதிர்காலப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்குக் குறைவானது அல்ல.

வளைகுடாவே இப்பகுதியின் எதிர்காலம் என்ற கருத்து இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. அதனுடன், தன்னைப்பற்றிய வளைகுடாவின் தொலைநோக்குப் பார்வையும் கேள்விக்குறியாகியுள்ளது.”

மேலும், அமெரிக்காவும் இஸ்ரேலும் வெவ்வேறு இடர் கண்ணோட்டங்களுடன் செயல்படுகின்றன.


குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் ஈரானின் ஆதரவு அமைப்புகளான ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா பலவீனமடைந்ததைத் தொடர்ந்து, பிராந்திய அளவில் மிகக் குறைவான பாதிப்புகளையே சந்திக்க நேரிடும் எனக் கணிப்பதால், ஈரானில் நிலவும் ஸ்திரமின்மையை அமெரிக்காவை விட இஸ்ரேல் அதிகம் பொறுத்துக்கொள்ளத் தயாராக இருக்கலாம்.

அதே நேரத்தில், எண்ணெய் விலைகளை உயர்த்தி, கப்பல் போக்குவரத்தைச் சீர்குலைக்கும் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களால் அமெரிக்கா அதன் வளைகுடா சாகாகளும் பெருமளவில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன.


இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் வியூகத் தலைவரான அசாஃப் ஓரியன், ஈரானில் குழப்பத்தை ஏற்படுத்த இஸ்ரேல் முயல்கிறதா என பிராந்திய நாடுகள் கேள்வி எழுப்புவதாகவும், அத்தகைய ஸ்திரமின்மையால் அதன் அண்டை நாடுகள் அல்லது அமெரிக்காவை காட்டிலும் இஸ்ரேல் குறைவாகவே பாதிக்கப்படும் என்றும் கூறினார்.

முக்கியமான அமெரிக்க உறவு



அடிப்படையில், இரு நட்பு நாடுகளுக்கும் இடர் குறித்த மாறுபட்ட கண்ணோட்டங்கள் உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேல் ஈரானை தனது இருப்புக்கே அச்சுறுத்தலாகக் கருதுகிறது. அதேசமயம் அமெரிக்காவுடன், பெரும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தி கூட்டணிகளைச் சேதப்படுத்தக்கூடிய ஒரு நீண்ட போரைத் தவிர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது.


இதனை விளக்குவது போல, ஈரான் கட்டாருடன் பகிர்ந்து கொள்ளும் உலகின் மிகப்பெரிய கடலோர இயற்கை எரிவாயு வயலான, அதன் பிரம்மாண்டமான சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், ட்ரம்பிடமிருந்து கடும் எதிர்ப்பை ஈர்த்தது.

அவர் சமூக ஊடகங்களில், “இந்தக் குறிப்பிட்ட தாக்குதல் பற்றி அமெரிக்காவிற்கு எதுவும் தெரியாது” என்றும், தனது சொந்த எரிவாயு வசதிகள் மீது ஈரானியத் தாக்குதல்களை எதிர்கொண்ட அமெரிக்காவின் நட்பு நாடான கட்டார் இதில் சம்பந்தப்படவில்லை என்றும் கூறினார்.


இஸ்ரேலுடனான நெருங்கிய அமெரிக்க இராணுவக் கூட்டணிக்கும், எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா அரபு கூட்டாளிகளுடனான முக்கியமான அமெரிக்க உறவுகளுக்கும் இடையில் ட்ரம்ப் மேற்கொள்ளும் நுட்பமான சமநிலைப்படுத்தும் முயற்சியை, அவரது புதன்கிழமை பதிவு எடுத்துக்காட்டியது.


போர் தொடங்கியதிலிருந்து ட்ரம்ப்பும் நெதன்யாகுவும் தினமும் தொலைபேசியில் பேசி வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், இஸ்ரேலியத் தாக்குதல் குறித்து தனக்கு முன்னரே தெரிந்திருந்ததை ட்ரம்ப் மறுத்தது, தங்களது இராணுவங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக அவரும் நெதன்யாகுவும் முன்னர் கூறியிருந்த கூற்றுகளுக்கு முரணாக இருந்தது.


வளைகுடா அரபு நாடுகளின் எரிசக்தி நிலையங்கள் மீதான ஈரானியத் தாக்குதல்களைத் தூண்டிய தெற்கு பார்ஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் பகிரங்கமாகப் பொறுப்பேற்கவில்லை.

இந்தத் தாக்குதல் அமெரிக்காவின் ஒப்புதலுடன் நடத்தப்பட்டது என்று இஸ்ரேலிய ஊடகங்கள் பரவலாகச் செய்தி வெளியிட்டன.


பெரும் இழப்புகளை ஏற்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்பவும், தடைகளிலிருந்து நிவாரணம் பெறவும் தெஹ்ரான் தனது பதற்றத்தை திட்டமிட்டு வருவதாகவும், இதன் மூலம் அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட விலையைக் கொடுத்தால் மட்டுமே வெளியேறும் வழியை ஏற்படுத்தித் தருவதாகவும் ஈரானிய உள்வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தப் போர் இறுதியில் இருமுனை அடிப்படையில் மதிப்பிடப்படும். ஒன்று ஈரானின் ஆட்சி வீழும், அல்லது வீழாது. அதைத் தவிர வேறு எதுவும், இந்தப் போர்த்தொடரை முழுமையான வெற்றிக்கான தேடலாகக் கட்டமைத்துள்ள நெதன்யாகுவுக்கு, ஆரம்பகால இராணுவ வெற்றிகளை ஒரு அரசியல் சுமையாக மாற்றிவிடும் அபாயத்தை ஏற்படுத்தும்.



அலி கமேனியின் ஆட்சிமுறை, பலவீனமான நிலையிலும் நீடித்தால், வெற்றி என்ற கண்ணோட்டம் வரம்பு மீறிய செயல் என மாறி, காசாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹிஸ்புல்லாவிடமிருந்து வரும் தீர்க்கப்படாத அச்சுறுத்தல்களை மீண்டும் வெளிக்கொணரும்.

இவை ஒரு முடிவடையாத போரின் விலையைக் காணத் தவறியது போல் தெரிகிறது என்பதே தற்போதைய போரின் நிலைபாடாகிறது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

Kereta terbabas di Putrajaya, 2 maut, 4 cedera parah | Makkal Osai

Next Post

Petrol Diesel Price | இந்தியாவில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 109.59ஆக நிர்ணயம்! தொழில்துறையினருக்கு ஷாக்

Next Post
Petrol Diesel Price | இந்தியாவில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 109.59ஆக நிர்ணயம்! தொழில்துறையினருக்கு ஷாக்

Petrol Diesel Price | இந்தியாவில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 109.59ஆக நிர்ணயம்! தொழில்துறையினருக்கு ஷாக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin