ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சி முகாமில், 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணியின் சீனியர் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது
ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி காட்டிய அதிரடி, கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஜாம்பவான் ரவீந்திர ஜடேஜாவின் பந்துகளை, வலைப்பயிற்சியின்போது வைபவ் துவம்சம் செய்யும் வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.




