மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளங்கலை, முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: PGTs (Chemistry)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ. 50,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வேதியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். மேலும் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கற்பிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Counsellor
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ. 45,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 26 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை (Guidance & Counselling) பிரிவில் ஒரு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Nursing Sister(Female)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ. 25,500 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 18 முதல் 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: செவிலியர் டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Laboratory Assistant (Physics)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ. 28,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் மூன்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் எம்எஸ்-ஆபிஸ்-இல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: PEM/PTI-Matron (Female)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ. 30,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 18 முதல் 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுத மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

