Last Updated:
கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மூன்றாவது உயர்மட்ட அதிகாரி காதிப் ஆவார்.
இஸ்ரேல் நடத்தியுள்ள அதிரடி தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் இதனை ஈரான் உறுதி செய்யவில்லை.
பல ஆண்டுகளாக இஸ்ரேலும் ஈரானும் நேரடியாக மோதாமல், உளவுத்துறைகள் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் மூலமாகவே மோதி வந்தன. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக இஸ்ரேல் கருதுகிறது.
இது தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் அதன் விஞ்ஞானிகளை இஸ்ரேல் ரகசியமாகத் தாக்கி வந்தது. தற்போது நேரடியாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதன் பின்னர் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் தற்போது ஈரானின் இரண்டாம் கட்டத் தலைவர்களை வரிசையாகக் குறிவைத்து வருகிறது.
இந்த நிலையில் ஈரானின் உளவுத்துறை அமைச்சகத்தின் தலைமையகத்தின் மீது நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.


