• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கோடாரியால் வெட்டிக் கொல்லப்பட்ட பழங்குடியின குடும்பத்தினர்… சூனியம் வைத்ததாகக் கூறி வெறிச்செயல்… | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 18, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கோடாரியால் வெட்டிக் கொல்லப்பட்ட பழங்குடியின குடும்பத்தினர்… சூனியம் வைத்ததாகக் கூறி வெறிச்செயல்… | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 18, 2026 8:59 PM IST

ஜார்க்கண்ட் பழங்குடியின குடும்பத்தினர், தங்களுக்கு எதிராக மாந்திரீக பூஜை செய்து சூனியம் வைத்ததாக கூறி கொடூர படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைத்ததாகக் கூறி பழங்குடியின குடும்பத்தினரை, கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொன்ற கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. படுகொலை சம்பவத்தின் பகீர் பின்னணி என்ன?

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டம் தங்கா தோலா கிராமத்தில்தான் அந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்கியிருந்தனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனிமையில் இருந்த அந்த வீட்டிற்குள், 55 வயதான தர்பாரி முர்மு, அவரது மனைவி மகி பாஸ்கி மற்றும் அவர்களது 12 வயது மகன் ஜித்நாராயண் முர்மு ஆகியோர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

தூரத்தில் காட்டு மரங்களுக்கு நடுவே மறைந்திருந்த அந்த கோடாரிக் கும்பல், அந்த வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் கொடூர ஆயுதங்களுடன் கும்பலாக அந்த வீட்டை நெருங்கிய அவர்கள், வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் மூவரையும் கோடாரியால் சரமாரியாக வெட்டித் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். மறுநாள் அந்த கிராமமே அந்த இடத்தில் கூடிவிட்டது. தகவலறிந்து அந்த இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

நள்ளிரவில் வந்த கோடாரிக் கும்பல் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் போலீசாருக்குத் தெரியவந்தது. குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்குள் பிடிக்க எண்ணி, போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகள் மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய கோடாரியையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது கொலைக்கான திடுக்கிடும் காரணம் தெரியவந்தது.

இதையும் படிங்க: இளம்பெண்ணை பைப்பால் அடித்து சித்ரவதை செய்த கணவன்… பெண்ணின் கதி என்ன…?

பழங்குடியின குடும்பத்தினர், தங்களுக்கு எதிராக மாந்திரீக பூஜை செய்து சூனியம் வைத்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் இந்த கொடூரக் கொலையை அரங்கேற்றியதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். இந்த கொடூரக் கொலை சம்பவம் அப்பகுதி பழங்குடியினத்தவர் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

கோடாரியால் வெட்டிக் கொல்லப்பட்ட பழங்குடியின குடும்பத்தினர்… சூனியம் வைத்ததாகக் கூறி வெறிச்செயல்…

Read More

Previous Post

நாளை முதல் எரிபொருள் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம்

Next Post

IPL 2026 : RCB-யை கைவிட்ட மான்செஸ்டர் யுனைடெட்! ரூ. 16,000 கோடி டீலில் இருந்து கிளேசர் குடும்பம் விலகல்… | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : RCB-யை கைவிட்ட மான்செஸ்டர் யுனைடெட்! ரூ. 16,000 கோடி டீலில் இருந்து கிளேசர் குடும்பம் விலகல்… | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : RCB-யை கைவிட்ட மான்செஸ்டர் யுனைடெட்! ரூ. 16,000 கோடி டீலில் இருந்து கிளேசர் குடும்பம் விலகல்… | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin