Last Updated:
நாய்களின் பிரச்சனைக்கு என்ன முடிவெடுக்கப் போகிறோம் என்பதையே வாக்குறுதிகளாக கொடுத்து பரப்புரை செய்து வருகின்றனர் ஃபிரான்ஸிலுள்ள வேட்பாளர்கள். எதற்காக தெரியுமா?
பிரான்ஸின் பாரிஸ் நகரத்திற்கான மேயர் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் நாய்கள் உள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
பாரிஸ் நகரத்திற்கான மேயர் தேர்தலில் வாக்காளர்கள் வளர்க்கும் 1 லட்சம் நாய்களுக்கு இருப்பிடம் இல்லை என்பது பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சோஷியலிஸ்ட் கட்சி முதல் கன்சர்வேடிவ் கட்சி வரை நாய்களின் பிரச்சினைக்கு என்ன முடிவெடுக்கப் போகிறோம் என்பதையே தமது வாக்குறுதியாக கொடுத்து பரப்புரை செய்து வருகின்றன.

அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் ஆதரவு பெற்ற கன்சர்வேடிவ் வேட்பாளரான ரச்சிடா டாட்டி, தனது தேர்தல் பரப்புரையின்போது, உரிமையாளர்கள் தங்கள் நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல புதிய பூங்காக்களை உருவாக்குவதாக கூறினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் சுற்று வாக்கெடுப்பில் முன்னிலை வகித்த சோஷியலிஸ்ட் வேட்பாளர் இம்மானுவேல் கிரெகோயர், நாய்கள் வசதியாக வாழக்கூடிய திறந்தவெளி இடங்களை உருவாக்குவதே முக்கிய நோக்கம் என்று கூறியுள்ளார்.

