கடந்த 28 ஆம் திகதி ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல், அமெரிக்கா ,ஈரான் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்தன.
இதனையடுத்து ஹோர்முஸ் நீரிணை வழியேயான கப்பல் போக்குவரத்தை தடைசெய்வதாக ஈரான் அறிவித்தது.
இதனையடுத்து அந்த நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து தடைசெய்யப்பட்ட நிலையில் பல கப்பல்கள் போக்குவரத்து அனுமதிக்காக காத்து நிற்கின்றன.
அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்காத கப்பல்கள் செல்ல அனுமதி
இந்த நிலையில் அமெரிக்காவையோ இஸ்ரேலையோ ஆதரிக்காத சரக்குகளை ஏற்றிச் செல்லும் வர்த்தகக் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை ஊடாக செல்ல ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை தொடர்ந்து அனுமதித்து வருவதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ‘ஷிப் டிராக்கர்’ நிறுவனத்தின் தரவுகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், சரக்குக் கப்பல்களும் எண்ணெய் தாங்கிகளும் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

