• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Erode Weekly Textile Market Hit Hard – Business Drops from Rs.5 Crore to Rs.50 Lakh | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

GenevaTimes by GenevaTimes
March 18, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Erode Weekly Textile Market Hit Hard – Business Drops from Rs.5 Crore to Rs.50 Lakh | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 18, 2026 11:40 AM IST

தேர்தல் விதிமுறைகள் தாக்கத்தால் வெளிமாநில வியாபாரிகள் வருகை தராததால் வெறிச்சோடிய ஈரோடு ஜவுளி வாரச்சந்தை. 5 கோடி வர்த்தகம் நடைபெறும் நிலையில் 50 லட்சத்திற்கு கூட வர்த்தகம் நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனை.

+

5

5 கோடி வர்த்தகம் நடைபெறும் நிலையில் 50 லட்சத்திற்கு கூட வழியில்லை 

தேர்தல் விதிமுறைகள் தாக்கத்தால் வெளிமாநில வியாபாரிகள் வருகை தராததால் வெறிச்சோடிய ஈரோடு ஜவுளி வாரச்சந்தை … 5 கோடி வர்த்தகம் நடைபெறும் நிலையில் 50 லட்சத்திற்கு கூட வர்த்தகம் நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனை.

ஈரோடு மாநகரில் பன்னீர்செல்வம் பூங்கா, காந்திஜி சாலை, சென்ட்ரல் மார்க்கெட், பவானி சாலை அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் கிடங்குகள் மற்றும் சந்தைகளில், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாலை தொடங்கி இரவு முழுவதும் ஜவுளி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தை தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களிலும் புகழ்பெற்றதாகும். இங்கு வெளிமாநில வியாபாரிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு வணிகர்கள் திரண்டு வந்து மொத்தமாக துணிகள் வாங்கிச் செல்வது வழக்கமாக இருந்து வந்தது. குறிப்பாக, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் அதிக வர்த்தகம் நடைபெறும் என வணிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், தேர்தல் விதிமுறைகள் காரணமாக ரூ.50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணத்தை உரிய ஆவணங்களுடன் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலில் இருப்பதால், சிறு வியாபாரிகள் பலர் சந்தைக்கு வராமல் தவிர்த்துள்ளனர். இதன் விளைவாக, இந்த வாரம் நடைபெற்ற இரவு நேர ஜவுளி சந்தை வழக்கத்திற்கு மாறாக வெறிச்சோடியது. இது குறித்து வணிகர்கள் கூறுகையில், “சிறு வியாபாரிகள் பெரும்பாலும் ரொக்கப் பணத்திலேயே பரிவர்த்தனை செய்கிறோம். உரிய ஆவணங்களை ஏற்பாடு செய்வதில் சிரமம் இருப்பதால் தேர்தல் காலங்களில் சந்தைக்கு வர இயலாமல் போகிறது. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது” என்றனர்.

மேலும், ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இந்த பிரச்சினை தொடர்ந்து ஏற்படுவதால், குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் வரை ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வர விலக்கு அளிக்க அரசும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவுளி வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திங்கள் முதல் செவ்வாய் வரை 5 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் நிலையில் 50 லட்ச ரூபாய் கூட வியாபாரம் நடைபெறவில்லை எனவும், இதனால் ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :

Mar 18, 2026 11:40 AM IST

Read More

Previous Post

இலங்கையை வந்தடைந்த இரண்டு எல்.பி எரிவாயு கப்பல்கள்

Next Post

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம்… மருந்து தட்டுப்பாட்டில் சிக்கித்தவிக்கும் சூடான்? | World News (உலக செய்திகள்)

Next Post
மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம்… மருந்து தட்டுப்பாட்டில் சிக்கித்தவிக்கும் சூடான்? | World News (உலக செய்திகள்)

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம்... மருந்து தட்டுப்பாட்டில் சிக்கித்தவிக்கும் சூடான்? | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin