
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மற்றும் அரசாங்கம் அதனை எதிர்கொள்ளும் விதம் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளதாகச் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) உரையாற்றும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில்:
“நாட்டின் தற்போதைய சவாலான சூழ்நிலையை அரசாங்கம் எப்படிக் கையாண்டு வருகின்றது என்பது குறித்த விரிவான விளக்கத்தை ஜனாதிபதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைப்பார்.”
“அதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17ஆம் திகதி) இரவு 7:30 மணிக்கு ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றைச் செய்யவுள்ளார்” எனவும் சபை முதல்வர் மேலும் தெரிவித்தார்.

