“இந்தப் போர் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளின் பல கட்டமைப்புகள் பாதிப்படைந்துள்ளன. இந்தப் போர் நிறைவு பெற்றதும், அந்தக் கட்டமைப்புகள் மீண்டும் சீரமைக்கப்படும்… மறுகட்டமைக்கப்படும்.
இதற்கு வெள்ளி, அலுமினியம், செம்பு (Copper) போன்ற உலோகங்கள் தேவைப்படும்.
ஆனால், இப்படி தங்கத்திற்குத் தேவை இருக்குமா என்று பார்த்தால், அப்படி எதுவும் இல்லை. இதனால், போர் முடிந்ததும் வெள்ளி, அலுமினியம், செம்பு ஆகியவற்றின் விலை உயரலாம்.
ஆனால், தங்கம் விலை நிலையாகவே தொடரும்.

இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அடுத்த டார்க்கெட்டாக கியூபாவை அறிவித்துள்ளார். ஆனால், கியூபா மீதான தாக்குதல் உலக வர்த்தகத்தைப் பாதிக்குமா என்று கேட்டால், அது கிடையாது.
அதனால், போருக்குப் பின் தங்கம் மற்றும் வெள்ளியில் சின்ன ஏற்றம் இருக்கலாம். ஆனால், அது குறிப்பிட்ட அளவில் மட்டுமே இருக்கும்.
ஏற்கெனவே தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், அது போதும். ஆனால், தற்போதைய சூழலில், சிறிய அளவிலான முதலீடு மட்டுமே போதுமானது. பெரிய எதிர்பார்ப்பில் முதலீடுகள் வேண்டாம்.”
