குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறி, அதன் மீது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தடைகளை விதிக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்க்கும் மற்றும் மனுஸ்மிருதியின் படி நாட்டை நடத்தத் துடிக்கும் ஓர் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், இந்த தேசத்தின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் விஷம் போன்றது. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதித்தார்.

தற்போது அமெரிக்க ஆணையமும் இந்த அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என எச்சரித்துள்ளது. எனவே, ஆர்.எஸ்.எஸ்-க்குத் தடை விதிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “அமெரிக்க ஆணையத்தின் மதிப்பீடுகள் ஒருதலைப்பட்சமானவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூக அமைப்பைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் இது போன்ற அறிக்கைகள் வெளியிடப்படுகிறது” என விளக்கம் அளித்துள்ளது.
