Last Updated:
ஐந்து மாநிலத் தேர்தலில் மேற்குவங்கம் மற்றும் கேரளாவில் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ள பாஜக, இரு மாநிலத்திற்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று (15ஆம் தேதி) அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலங்களிலும் அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23ஆம் தேதியும், புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மூன்று சட்டமன்றங்களுக்கும் ஏப்ரல் 9ஆம் தேதியும் வாக்குப் பதிவுகள் நடக்கின்றன. மேற்கு வங்கம் சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23ஆம் தேதி முதற்கட்ட வாக்குப் பதிவும், ஏப்ரல் 29ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும் நடைபெறுகிறது.
இதில், அசாமில் பாஜக ஆட்சியும், புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சியிலும் இருந்துவருகிறது. தமிழ்நாட்டைத் தவிர்த்து, கேரளம் மற்றும் மேற்குவங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 2026 சட்டமன்றத் தேர்தலில் மும்முரமாக இயங்கிவருகிறது.
இந்நிலையில், 294 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில் முதற்கட்டமாக 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இதில், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சுவேந்து அதிகாரி நந்திகிராம் மற்றும் பபானிபூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு அவரை தோற்கடித்தவர் சுவேந்து அதிகாரி. அதேபோல், மம்தா பானர்ஜி தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் பபானிபூர் தொகுதியிலும் சுவேந்து அதிகாரியை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.
இதேபோல், 14 தொகுதிகளைக் கொண்ட கேரளாவிற்கு வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் முதற்கட்டமாக 47 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
மம்தா பானர்ஜிக்கு செக்; சுவேந்து அதிகாரியை களம் இறக்கிய பாஜக! வெளியான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்


